80s toys - Atari. I still have
Study MaterialsPictures by JoHomeBlogAudiance Note

என் தாத்தாவின்
சித்தி பையன்,
பார்பதற்க்கு பிரகாஷ்
ராஜ் போலவே இருப்பான்.
மிகுந்த ஐய்யப்ப
சாமி பக்தி உடையவர்.
அதற்கென்று தனியே ஒரு வீட்டில்
ஐயப்ப
சாமி படங்களை வைத்து தினமும்
இரு வேலை பூஜை செய்து வாரந்தோறும்
சனியன்று பஜனை வைத்து அனுமாருக்கு வடை மாலை சாத்தி
அமர்களப்படுத்துவார்..
(ஜோதியின் மறுக்கப்பட்ட
உறவினிடையே நடந்த
ஒரு உண்மை சம்பவம்)
இந்த கதை தொடங்கும்
நேரம் அவருக்கு ஒரு 45
வயது இருக்கும்.
திருமணமே வேண்டாம்
என்று முடிவில்
இருந்தார். என்
அம்மா சொல்வார், அவர்
ஒரு பெண்ணை விரும்பினார்,்
திருமணம் செய்ய
முடியவில்லை. அதனால்
அதற்க்கு பின் திருமணம்
செய்யவில்லை.
என் மாமா ஊரும்
அதே ஊர் தான் என்பதால்
என்
பள்ளி நாட்களில்
கோடை விடுமுறை அன்று அங்கே நான்
என் அண்ணன் இன்னும்
சிலர்
என் சித்தி பசங்க என்
அத்தை பசங்க
என்று அங்கே செல்வதுண்டு..
அப்பொழுது என் சின்ன
தாத்தாவின் நண்பர்
அவரின் மகள்களும்,
ஒருவர் என்னைவிட
மூத்தவர்
(5 வருடங்கள்)
இன்னொருவர்
என்னை விட இளையவள்
இருவரும்
அங்கே வந்துவிடுவார்கள்..
நாங்கள் அனைவரும்
ஒன்றாக
விளையாடி சந்தோஷமாக
இருப்போம். நான் முதல்
வகுப்பு படிக்கும்
போதிலிருந்து 7 ம்
வகுப்பு படிக்கும்
வரை எங்கள்
கோடை கால
விடுமுறை இப்படிதான்
கழியும்.
அதன் பின் நான்
விடுமுறைக்கு செல்வதில்லை.
காலங்கள் ஓடியது..
அப்பொழுது அவருக்கு வயது 55
இருக்கும்.,
ஒருநாள்
செய்தி வந்தது அவரும்
அவரின் நண்பரின் மூத்த
மகள் 25 வயது இருக்கும்
இருவரும் ஓடி போய்
விட்டார்கள் என்று..
எங்களுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி..
தன் நண்பனின் மகள், தன்
மகளை போன்றவள்
எப்படி இது நடந்தது.
இந்த மாதிரி ஒரு காதல்
சாத்தியமா? தன்
நண்பனுக்கு துரோகம்
செய்ய எப்படி மனம்
வந்தது.
அந்த
பெண்ணுக்கு இவர்மேல்
இருந்தது காதலா?
யாருமில்லை என்ற
அனுதாபமா? ஓடி போய்
திருமணம்
முடித்து திரும்பி வந்தார்கள்.
பெண்ணின் பெற்றோர்கள்
எவ்வளவோ கெஞ்சியும்
அந்த பெண் வாழ்ந்தால்
இவரோடுதான்
இல்லையென்றால் நான்
இறந்து விடுவேன்
என்று சொல்லிவிட்டார்கள்.
இத்தனைக்கும் அவரின்
பெற்றோர் நல்ல வசதியான
குடும்பம்.
எல்லா வசதிகளையும்
உதறி வயது வித்தியாசத்தை புறந்தள்ளி அவரை திருமணம்
செய்ய முடிவெடுக்க
வைத்தது எது?
தன் வயது தோழன் மகள்,
தன் வயது இதை எல்லாம்
யோசிக்காமல்
அவரை திருமணத்துக்கு தூண்டியது எது?
இதற்கு பெயர் காதலா?
காதலுக்கு கண்
இல்லையா?
அந்த பெண்ணின் இந்த
முடிவுக்கு காரணம்.?
அவரின் வயது தான்.
அவருக்கு துணையாக
அவரின் 90 வயதை கடந்த
அம்மா மட்டுமே..
அவருக்கு பின் யார்
இவருக்கு துணை?
90 வயது அம்மாக்கு இவர்
துணையாக இருக்கிறார்.
நாளை இவருக்கு துணையாக
யார் இருப்பார்? நாம்
காலமெல்லாம்
இவருக்கு துணையாக
இருக்க வேண்டும்
என்று எதை பற்றியும்
கவலை படாமல் இந்த
முடிவு எடுத்தார்.
அவர் ஏன் இந்த
முடிவுக்கு வந்தார்
என்று தெரியவில்லை.
இந்த பெண்ணின்
பிடிவாதம் காதல்
அவரை இந்த
முடிவுக்கு வைத்துருக்கும்
என்று நினைக்கிறேன்.
எங்கள்
பாட்டி அதாவது அவரின்
அம்மா சொல்லிட்டே இருப்பார்.
என்
மகனை தனியா விட்டிட்டு நான்
போக (இறக்க) மாட்டேன்,
நான் பேரன்
பேத்திகளை பார்த்துட்டு தான்
சாவேன் என்று. தினமும்
கடவுளை வேண்டுவார்.
இன்று அவர்களுக்கு ஒரு பெண்ணும்
பையனும் இருகிறார்கள்.
அந்த பெண்ணின்
பெற்றோரும் முதல்
பெண் பிறக்கும்
சமயத்திலேயே இவர்களுடன்
சமாதானம்
ஆகிவிட்டார்கள்.
எங்கள்
பாட்டி நினைத்த
மாதிரியே பேரன்
பேத்திகளை பார்த்து 106
வயதில்
2010ல் இறந்தார்.


Mozilla19/04/25