Teya Salat
Study MaterialsPictures by JoHomeBlogAudiance Note

ஆவி
____தொடர் 7
இதுவரை...
ஆவி இருக்கும் இடம்?
ஆவியை பார்க்க
முடியுமா?
இனி...
Shriraam இன்
வேண்டுகோளுக்கு இணங்க
உண்மை(கற்பணை) கதை
ஒருவர்
அரசு வேலை
கிடைத்தால்
தஞ்சாவூருக்கு சென்று
பணி புரிய
வேண்டியதாயிற்று.
அவர் இங்கு
இருந்தபோது நானும்
முருகவேல் என்ற
வேறு ஒருவரும் மிக
நெருங்கிய நண்பர்களாக
இருந்தோம். அவர்
தஞ்சாவூருக்குப்
பிரிந்து
சென்றதிலிருந்து
மனதிற்குள்
இனம்புரியாத சோகம்
மூன்று பேருக்குமே
உண்டு. இதை நானும்
நண்பர் முருகவேலும்
அடிக்கடி பேசி
தீர்த்துக்கொள்வோம்.
திடீரென்று ஒரு நாள்
காலை
தஞ்சாவூரிலிருக்கும்
நண்பரிடம்
இருந்து தொலைபேசி
அழைப்பு வந்தது.
முருகவேல்
எப்படி இருக்கிறான்?
என்று என்னிடம்
கேட்டார்.
நன்றாகத்தானே
இருக்கிறார்,
நேற்று இரவு கூட
வெகுநேரம்
பேசிக்கொண்டு
இருந்தோம். ஏன்
திடீரென்று அவரைப்
பற்றிக் கேட்கிறாய்?
என்று நான் கேட்டேன்.
ஒன்றுமில்லை….
இப்போது 10
நிமிடத்திற்கு முன்பு
முருகவேல் என்
அலுவலக வாசலில்
நின்றதைப் பார்த்தேன்.
ஒருவேளை அவன்
தஞ்சாவூர்
வந்திருக்கிறானோ
என்று தெரிந்து
கொள்ளவே போன்
செய்தேன்., இருந்தாலும்
மனது ஏதோபோல்
இருக்கிறது.
சரி பரவாயில்லை என்றார்..
நானும் முருகவேல்
இங்குதான்
இருக்கிறார். அவரைப்
போன்று வேறு
யாரையாவது
்பார்த்திருப்பாய­
எனக்கூறி
தொலைபேசியை
வைத்து விட்டேன்.
வைத்த 10வது நிமிடம்
ஒரு ஆள் மேல்
மூச்சு கீழ்மூச்சு வாங்க
என்னிடம் விரைவாக
வந்தார்.
உங்களுக்கு விஷயம்
தெரியுமா? என்றார்.
அவர் குரலில்
படபடப்பும்
தடுமாற்றமும்
இருந்தது. அவர்
முகம் அவரின்
விழிகள் அலைந்த விதம்,
இவர்
ஏதோ அதிர்ச்சியான
விஷயத்தைச் சொல்லப்
போகிறார்
என்பதை எனக்குத்
தெளிவாக காட்டியது..
ஏன் என்ன விஷயம்
நிதானமாகச்
சொல்லுங்கள் எதற்காகப்
கள்பதட்டப்படுகிறீர்?
என்று அவரை ஆ சுவாச
ப்படுத்தினேன்.. அவர்
தான்
அமைதி பெறாமலே
அடுத்த
அதிர்ச்சியை எடுத்து
வைத்தார். உங்கள் நண்பர்
முருகவேல்
அரைமணி நேரத்திற்கு
முன் செத்து விட்டார்
என்றார்.
அதிர்ச்சியில்
ஒரு நிமிடம் ஆடிப்போய்
விட்டேன்.
வேறொறு சம்பவத்தோடு தொடர்
தொடரும்ஂஂஂ


Mozilla19/04/25