பாகம் 5
இறந்தவர்களின்
ஆவி மீண்டும்
வருவது பற்றி...
ஒரு உண்மை சம்பவம்!!
உங்களுக்காக..
நீண்ட காலமாக
பலருக்கு புரியாத
புதிராக இருந்துவரும்
நிகழ்வுகளில் இதுவும்
ஓன்று.
கிறிஸ்த்தவ பாஸ்டர்
ஒருவர் நடத்திய கூட்டம்
ஒன்றின் முடிவில்
எல்லோருக்காகவும்
தனித்தனியே ஜெபிக்க
அழைத்தார்.
அப்பொழுது ஜெபிப்பதர்க்காக
வந்த சுமார் 22
வயது பெண்
ஒருவர் அவர்
கை வைத்து ஜெபிக்க
ஆரம்பித்ததும்
சத்தம்போட்டு கதற
ஆரம்பித்தார்.
ஆவேசத்துடன் அந்த
பாஸ்டரை அடிப்பதற்கு முற்படவே பலர்
சேர்ந்து அந்த பெண்ணை
பிடித்துகொண்டனர்..
பிறகு அந்த பாஸ்டர்
(இனி மரியாதைக்காக
ஊழியர்
என்று குறிப்பிட்டுள்ளேன்)
அந்த பெண்ணின்
தலைமேல்
கைவைத்து நன்றாக
ஜெபித்துவிட்டு அவர்
கேட்ட கேள்விகளும் அந்த
பெண் சொன்ன
பதில்கள்
இதோ...
ஊழியர்:-
நீ யார்?
அந்த பெண்:-
நான் ஈதன்(Ethan)
ஊழியர்:-
உன்
வீடு எங்கே உள்ளது?
பெண்:-இந்த
பெண்ணின்
வீட்டுக்கு பக்கத்து தெருவில்
ஊழியர்:-
ஏன் இந்த
பெண்ணை பிடித்துள்ளாய்?
பெண்:-
எனக்கு இவளை ரொம்ப
பிடிக்கும் அதனால்
பிடித்துள்ளேன்
ஊழியர்:-
எவ்வளவு நாள்
இந்த பெண்ணுள்
இருக்கிறாய்?
பெண்:-
நான் இறந்தபின்
சில வருடங்களாய்
ஊழியர்:-
இவளை விட்டு போய்விடு
பெண்:-
போக மாட்டேன்
ஊழியர்:-
உனக்கு இயேசுவை தெரியுமா?
பெண்:-இயேசப்பாதானே,
"ஒ தெரியுமே"
ஊழியர்:-
அந்த
இயேசுவின் நாமத்தில்
சொல்கிறேன் நீ
உடனே போய்விடு
பெண்:-நீ யார் நாமத்தில்
சொன்னாலும் நான்
போக மாட்டேன்!!
சிறிது நேரம் தனியாக
ஜெபித்த அந்த ஊழியர்,
அந்த பெண்ணின்
கணவனை
அழைத்து அவரின்
கண்ணை தனது கையால்
மூடினார்.
அவ்வளவுதான்
அந்தப்பெண் தரையில்
விழுந்து புரண்டுகொண்டு எனது கண்ணை ஏன்
மூடுகிறாய்
உடனே கையை எடு இல்லை;
உன்னை கொன்று விடுவேன்
என்று ஆவேசமாக பாய,
நீ
உடனே இவளை விட்டு போ என்று அந்த
ஊழியர் செம்பில் கொஞ்சம்
தண்ணீர்(புணித நீர்)
எடுத்து ஜெபித்து அந்த
பெண்ணின் தலையின்
மேல் தெளிக்க, அந்த
பெண் அவர் கையிலிருந்த
செம்பைபிடுங்கி அவரை அடிக்க
முற்ப்பட, கடைசியில்
எப்படியோ ஒரு வார்த்தை சொல்லி அந்த
பெண்ணை தரையில்
மொத்தென்று விழ
வைத்தார் அந்த ஊழியர்.
சிறிது நேரம்
கழித்து எழுந்த
அந்தப்பெண் தன்
ஆடையை எல்லாம்
சரிசெய்துகொண்டு ஒன்றுமே நடக்காததுபோல்
எழுந்து நின்றாள்.
அந்த ஊழியர்
யார் என்றே தெரியாத
அவர்களுக்கிடையே இதுபோல்
நடந்ததால்
அவர் செட்டப்
செய்து நடத்துகிறார்
என்று சொல்ல
முடியவில்லை.
இறந்தவரின்
ஆவி இன்னொருவருக்கும்
வந்து பேசுவதை பலரும்
வாழ்வில்
பார்த்திருக்கலாம்.
அது எவ்வளவு தூரம்
உண்மை?
அனுபவம் உள்ளவர்கள்
தங்கள்
கருத்தை(comments)
தெரிவிக்கவும்.
தொடரும்ஂஂஂ
எழுத்து,
இயக்கம்,
உங்கள் ஜோதி