ஜோதி எழுதி ஒளிபரப்பும்
நெடுந்தோடர்...
>]"ஆவி"[>
மனிதன் இறப்பிற்குப்
பின்பு அவனுடைய
உடலிலிருந்து பிரிந்து செல்லும்
ஆவி, ஆவியுலகம் என்கிற
தனிப்பட்ட உலகில்
வாழ்கிறது என்கிற
நம்பிக்கை பலரிடம்
இருக்கிறது. மனிதன்
இறப்பிற்குப்
பின்பு அவன் உயிருடன்
இருக்கும் போது செய்த
நன்மை தீமைகளுக்கு ஏற்பதாகவேதான்
சொர்க்கம், நரகம்
போன்றவை கிடைக்கிறது.
சொர்க்கம், நரகம்
போன்றவற்றில்
கிடைக்கும் சுகம் மற்றும்
தண்டனைகளை ஆவியுடல்
ஏற்றுக் கொள்கிறது.
ஆயுட்காலம் முடியாமல்
தற்கொலை,
விபத்து போன்று இடையில்
மரணமடைந்தவர்களின்
ஆவிகள் பேய்,
பிசாசுகளாக
உலவுகின்றன என்கிற
நம்பிக்கையும்
இதிலிருக்கின்றன.
அதாவது ஆவி என்பது ஒருவர்
இறந்த பின்பு அவரின்
எதோ ஒரு வகை எச்சம்
இருந்து அவர் வசித்த
இடங்களில்
அலைந்து கொண்டிப்பதான
ஒரு வகை நம்பிக்கை.
இறப்புக்காலம்
வருவதற்கு முன்பாகவே மரணமடைந்தவர்கள்
அவர்கள் இறப்புக் காலம்
வரும் வரை பேயாக
அலைந்து கொண்டிருப்பார்கள்
என்கிற
நம்பிக்கை இந்தியாவில்
பெரும்பான்மையானவர்களிடம்
இருந்து வருகிறது.
இது ஒரு மூட
நம்பிக்கை என்றாலும்
ஆன்மீக
நம்பிக்கை கொண்டவர்களிடையே
இது அதிக
அளவில் இருக்கிறது..
நம்முடன் வாழ்ந்து வரும்
ஆவிகளின்
தோற்றத்தை நாளே ஒளிபரப்புகிறேன்.!!
கதை
திரைக்கதை
எழுத்து
உங்கள் ஜோதி.